நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்!
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.
சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பாக பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐஸ்வர்யா ராய் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்ததாக பனாமா பேப்பர் லீக் ஆவணங்களில் தகவல் வெளியானதை தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரிகளைத் தவிர்ப்பதற்காக கடல் கடந்த தீவுகளில் நிறுவனங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பதை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவலை அடுத்து அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.