அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் , விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
இந்த சோதனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது, அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு ஆம் ஆத்மீ தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழக கல்வி அமைச்சர் மீது அமலாக்கத்துறை சோதனையை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் கட்சிகளை உடைத்து அனைவரையும் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அமலாக்கத்துறை மூலம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை உங்களால் பயமுறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
We strongly condemn ED raids on TN Education minister now. They are trying to break parties and scare everyone wid ED
But for ED, NDA would be left wid no partners and many leaders in BJP would have also left
U cannot scare or control a great nation like India thro ED
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 17, 2023