#BREAKING: பணமோசடி வழக்கில் அமைச்சரை அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை..!
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்க இயக்குனரகம் கைது செய்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் வீட்டிற்கு காலை 7 மணிக்கு சென்ற அமலாக்கத்துறை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நவாப் மாலிக்கை தங்களுடன் அழைத்துச் சென்றது. அங்கிருந்து மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திதிற்கு நவாப் மாலிக்கை அழைத்து சென்றனர். பின்னர், ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
நவாப் மாலிக் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கோபத்தில் உள்ளனர். நவாப் மாலிக் விசாரிக்கப்பட்ட அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியேசி ஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், இப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டத்தை சார்ந்தவர்கள் மும்பையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான பணபரிவர்த்தனையில் நவாப் மாலிக்கிற்கு தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.