ட்விட்டரை காலி செய்துவிட்டு "Mastodon" நோக்கி செல்லும் வலைதளவாசிகள் என்னாச்சி "Blue Tick " வேணும்னா இங்க வாங்க
சமூக வலைதளங்களை பொறுத்தமட்டில் இந்தியாவில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது .ஆனால் இது சிறிது நாட்களாகவே அதிக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது .பேஸ்புக் தங்கள் பயனர்களை உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது இது ஒருபுறம்இருக்க ட்விட்டர் தனது பயனர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .இதனால் சமூக வலைதளவாசிகள் “Mastodon” என்ற சமூகவலைத்தள் பக்கம் நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
ட்விட்டர் ,பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ பக்கம் மற்றும் பிரபலமானவர்களுக்கு புளூ டிக் கொடுக்கப்படும் .இந்த புளூ டிக் கொடுப்பதில் ட்விட்டர் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாகவும் அவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு புளு டிக் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது .
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள டிவிட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் இந்தியா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது .அதாவது எங்கள் கொள்கையில் நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் அதைபோல் எந்தவொரு சித்தாந்த சார்பிலும் அரசியல் பார்வையிலும் செயல்படுவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளது .
கடந்த சில நாட்களாக வாட்ஸப் மூலமாக அரசியல்வாதிகள் ,எழுத்தாளர்கள் ,சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகள் உளவுபார்க்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது .இந்த செயலை இஸ்ரேலை சேர்ந்த ஒரு உளவு நிறுவனம் செய்ததாக ஒரு பெரிய பூகம்பம் வெடித்துள்ளது .
சமூகவலைதளத்தை உபயோகிப்பவர்கள் தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் “Mastodon” நோக்கி செல்பவர்களின் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .”Mastodon” என்பது ஒரு சமுகவலைதளம் இது ட்விட்டரை விட மேம்பட்டு இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது .யாரேனும் தவறு செய்தால் புகார் அளித்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பயனர்களின் விவரங்கள் எந்த வகையிலும் உளவுபார்க்கப்படாது என்று “Mastodon” கூறுகிறது.
You want a bluetick? You can have it. In Mastodon. pic.twitter.com/dvGWs8bLOq
— Prasanna S (@prasanna_s) November 7, 2019
அதுமட்டுமில்லாமல் “Mastodon” இல் எந்தவிதமான வணிகரீதியான விளம்பரங்கள் காட்டப்படாது என்று உறுதி கூறுகிறது .இந்த நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் தான் ஆன நிலையில் சமீபகாலமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் நடக்கும் சர்ச்சைகளினால் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது “Mastodon”.