71,000 பேருக்கு பணி நியமன ஆணை; பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்.!
ரோஸ்கர் மேளாவின் கீழ் 71,000 பேருக்கு நாளை பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகிறது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 71,000 பேருக்கு நாளை பிரதமர் மோடி, பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். ரயில்வே, காவல்துறை, அஞ்சல்துறை, வருமான வரித்துறை ஆகிய துறைகளில் புதிதாக பணியமர்த்தப்படவுள்ள 71,000 பேருக்கு பிரதமர் நாளை பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.
பணி நியமன ஆணை பெற்றவர்களிடம் பிரதமர் மோடி, நாளை காணொளியில் உரையாற்றுகிறார். இந்திய அரசின் கீழ் உள்ள ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் கிளார்க், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அக்கவுண்டன்ட், தபால் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர் நூலகர் என பல்வேறு பதவிகளில் சேர உள்ளனர்.
பிரதமரின் ரோஸ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் ஒரு படியாகும். மேலும் இது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட அரசு திட்டமாகும். பல்வேறு துறைகளின் கீழ் 10 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி பிரதமர் மோடி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.