இந்திய ராணுத்தில் வேலைவாய்ப்பு.. ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம்.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

Default Image

இந்திய ராணுத்தில் தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC) 134 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.

இந்திய இராணுத்தில் தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC) 134 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ஆண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. வேலைவாய்ப்பு அறிவின்படி, இந்தியாவில் நிரந்தர கமிஷனுக்காக டேராடூனில் உள்ள இராணுவ அகாடமியில் (IMA) பயிற்சி நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு  joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. செப்டம்பர் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய இராணுவம் TGC ஆட்சேர்ப்பு 2021:

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம்.

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் இருக்க வேண்டும்.
  • பட்டப்படிப்பு இறுதி வருடத்தில் இருப்பவர்கள் ஜூலை 1, 2021-க்கு முன், பட்டம் தொடர்பான அனைத்து தேர்வுகளையும் முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஐஎம்ஏவில் (IMA) பயிற்சி தொடங்கிய நாளிலிருந்து 12 வாரங்களுக்குள் பொறியியல் பட்டம் வழங்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

  • பயிற்சியின் காலம் 49 வாரங்கள்.
  • வேலை அறிவிப்பின் படி, பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ .56,100 உதவித்தொகை வழங்கப்படும்.
  • பயிற்சி முடிந்தவர்கள் லெப்டினன்டாக நிலை 10 ஊதிய விகிதத்தில் (Level 10 pay scale) ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்திய ராணுவத்தின் joinindianarmy.nic.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • அதிகாரி நுழைவு விண்ணப்பம்/உள்நுழைவு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘பதிவு’ என்பதைக் கிளிக் செய்யவும். (Click on Officer Entry Apply/Login and then click on Registration)
  • வழிமுறைகளை கவனமாக படித்த பிறகு ஆன்லைன் பதிவு படிவத்தை நிரப்பவும்.
  • பதிவுசெய்த பிறகு, டாஷ்போர்டின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும். (After getting registered, click on Apply Online under Dashboard).
  • அதிகாரிகளின் தேர்வு தகுதி ஒரு பக்கம் திறக்கும். (A page Officers Selection Eligibility will open).
  • தொழில்நுட்ப பட்டதாரி பாடநெறிக்கு எதிராக காட்டப்பட்டுள்ள விண்ணப்பம் என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு பக்க விண்ணப்பப் படிவம் திறக்கும். (Click Apply shown against Technical Graduate Course).
  • தேவையான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

தேர்வு செயல்முறை:

  • தேர்வு முறை PET, SSB நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு அடிப்படையில் இருக்கும்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://joinindianarmy.nic.in/officers-notifications.htm

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC_134_COURSE.pdf

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy