இஎம்ஐ 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் – மத்திய அரசு.!
வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கான தவணையை இப்போதைக்கு செலுத்த தேவையில்லை. கடன் கொடுத்த நிறுவனங்களும் தவணை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என மத்திய அரசு சலுகை வழங்கியது.
இதையடுத்து, வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய கோரும் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டது. ஆனால் மத்திய அரசு விளக்கம் அளிக்காத நிலையில் பல கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது.
அதில் மத்திய அரசின் பொது முடக்கும் காரணமாகவே கடன் செலுத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்த ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இஎம்ஐ அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.