இந்தியா தலையிட உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்!
ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபருடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என்று உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்.
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா குண்டுகளை வீசி தாக்கும் நிலையில், இந்தியாவுக்கு உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் புடியுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என்றும் இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது. உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதுள்ள நிலை குறித்து உக்ரைன் அதிபருடன், இந்திய பிரதமர் பேசி அறிந்துகொள்ளவும் கூறியுள்ளது.
இதனிடையே, உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்ற நிலை கவலையை தருகிறது என்று ஐநா பாதுகாப்பு சபை இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என ஐநா சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. நாசகரமான விளைவுகளால் உக்ரைன் மட்டுமில்லை, உலகமே பாதிப்புக்கு ஆளாகும் என ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.