யானை மீட்கும் பணியை ஒளிப்பதிவாக்க சென்றிருந்த பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் படகு கவிழ்ந்தால், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் எனும் பகுதியின் அருகில் உள்ள மகாநதியில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நதியின் நடுப்பகுதிக்கு சென்று மீண்டும் கரைக்கு வர முடியாமல் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது.
இதனை அடுத்து ஒடிசா பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சக்திவாய்ந்த விசைப்படகில் விரைந்த மீட்புப்படையினர் யானையை நதிக்குள் சென்று விரட்டினால் மறு கரைக்குச் சென்று விடும் என திட்டமிட்டு சென்றனர். அப்போது பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் அரிந்தம் தாஸ் என்பவரும் புகைப்பட கலைஞர்கள் சிலரும் சென்றனர்.
ஆனால், நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதனை அடுத்து படகில் இருந்த அனைவரையும் மீட்க, அடுத்த மீட்பு படையினர் விரைந்து சென்றுள்ளனர். மீட்பு படையினர் 3 பேரையும் அரிந்தம் தாஸ் மற்றும் புகைப்பட கலைஞர்களையும் மீட்பு உள்ளனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், செய்தி தொடர்பாளர் அரிந்தம் தாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் புகைப்பட கலைஞருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் கட்டாக் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…