உயிரிழந்த பாகன்;கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்திய யானை-வைரல் வீடியோ…!

- கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பாகன்,
- அவரின் உடலுக்கு கண்ணீர் ததும்ப யானை இறுதி மரியாதை செலுத்தியது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த பாப்பன் ஓமணச்சேட்டன் என்பவர் பல ஆண்டுகளாக யானை பாகனாகவும்,அதனை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.அந்த வகையில்,’கஜவீரன் பிரம்மதத்தன்’ என்ற யானையை கடந்த 25 ஆண்டுகளாக பராமரித்து வந்தார்.
இந்நிலையில்,ஓமணச்சேட்டன் புற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இதனையடுத்து,அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது,அங்கு வந்த கஜவீரன் பிரம்மதத்தன் பாகன் ஓமனச்சேட்டன் உடலைப்பார்த்து கண் கலங்கியபடி,தனது தும்பிக்கையை உயர்த்தி கண்ணீர் ததும்ப யானை இறுதி வணக்கம் செலுத்தியது.
இதனைக்கண்டதும்,பாகனின் உறவினர்கள் மேலும் கதறி அழுதனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
In the era of viruses animals have more humanity than humans
The incident, which happened in Kottayam, Kerala, saw the elephant named Pallat Brahmadathan paying last respects to his master as locals watched with teary eyes.
????. pic.twitter.com/Evt6QNg4Cq— Ashoke Pandit (@ashokepandit) June 4, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025