எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 37% உயர்ந்து, 1.6 லட்சம் கோடி வரை அதிகரிக்க வாய்ப்பு- ICEA
2022-23 நிதியாண்டில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 37% அதிகரித்து 1.6 லட்சம் கோடி வரை அதிகரிக்கலாம் என்று ICEA தெரிவித்துள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி 36.8% அதிகரித்து ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டும் என்று தொழில்துறை அமைப்பான இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) தெரிவித்துள்ளது. இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) கூற்றின் படி, 2021-22ல் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 1,16,937 கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 36.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும், மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதி, மொபைல் போன் ஏற்றுமதி தான் என்று தொழில்துறை அமைப்பான ஐசிஇஏ செவ்வாயன்று தெரிவித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் மொபைல் போன் ஏற்றுமதி ரூ. 45,000 கோடியாக இருந்தது, மற்றும் 2022-23 நிதியாண்டில் இது ரூ.75,000 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைப்பின் படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் முதல் டிசம்பர் 2022 வரை எலக்ட்ரானிக் பொருட்களின் மொத்த ஏற்றுமதி ரூ.1,33,313 கோடியாக வளர்ந்துள்ளது, இது 2021 இல் ரூ.81,780 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியின் வளர்ச்சி மொபைல் போன் ஏற்றுமதியால் பெரும்பாலும் வழிநடத்தப்படுகிறது.
இது ஏப்ரல்-டிசம்பர் 2022 இல் ரூ. 60,000 கோடியாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் மொபைல் போன் ஏற்றுமதி ரூ.27,288 கோடியாக இருந்தது. ஏப்ரல்-டிசம்பர் 2022 இல் இந்தியாவில் இருந்து மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் டாப் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகியவை அடங்கும் என்று ICEA தெரிவித்துள்ளது.