இந்தியாவில் மின்னணு கழிவு பொருள்கள் அதிகரிப்பு !!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் !!!
- இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 2 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் இருந்தன.
- 2020-ம் ஆண்டு 5.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என அசோசம் தொழில் வர்த்தக சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கம்ப்யூட்டர் ,தொலைபேசி போன்ற மின்னணு பொருள்கள் அதிகமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில் மின்னணு கழிவு பொருள்கள் அதிகரித்து வருகின்றனர். மின்னணு கழிவு பொருள்களை அகற்றுவதற்கு பெரும் சவாலாக இந்தியாவிற்கு உள்ளது.
மின்னணு கழிவுகள் உருவாக்கத்தில் சீனா முதல் இடத்தில் உள்ளது.இந்தியா ஐந்தாவது இடத்திலும் ,மூன்றவது இடத்தில் அமெரிக்கா, ஜப்பான் , ஜெர்மனி போன்ற நாடுகள் உள்ளன.
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 2 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் இருந்தன. 2020-ம் ஆண்டு 5.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என அசோசம் தொழில் வர்த்தக சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னணு கழிவுகளின் பயன்பாடு 19.8 சதவீதம் உள்ளது. மகாராஷ்டிரா-வில் ஆண்டுக்கு 47 ஆயிரத்து 810 டன் மின்னணு கழிவுப்பொருள்களை மறுசுழற்சி செய்கின்றன.