15 நாள்களில் மின் இணைப்பு.., பெண்களுக்கு இலவச கல்வி., கடன்கள் தள்ளுபடி- பாஜக அறிவிப்பு..!
புதுச்சேரியில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து சந்திக்கவுள்ளனர். இதில், புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா் காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் உள்ளது.
- புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும்.
- புதுச்சேரி அரசு வேலைகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் காவல்துறை பணியிடங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- விண்ணப்பித்த 15 நாள்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
- கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.
- உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்
- கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- புதுச்சேரிக்கு என்று தனி பள்ளிக் கல்வி தேர்வாணையம் உருவாக்கப்படும்.