மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் – சுனில் அரோரா

Default Image

மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, மார்ச் 27, ஏப்ரல் 1, 6,10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.  இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி  பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, மார்ச் 27, ஏப்ரல் 1, 6,10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்