டெல்லி சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்
டெல்லி சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி நாளை (பிப்ரவரி 8-ஆம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது.ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.
டெல்லி சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக டெல்லியில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. .டெல்லியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,46,92,136 ஆகும். தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.