கேரளாவில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இடதுசாரிகள் முன்னணியில் உள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 71 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கலாம். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கேரளாவில் இடதுசாரி கூட்டணிகள் அதிகளவிலான இடங்களில் முன்னணி வகிக்கின்றனர்.
அந்தவகையில் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை. 99 இடங்களில் 81 தொகுதிகளில் இடதுசாரியினர் வெற்றிபெற்றுள்ளனர். 41 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் நிலையில், 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் கேரள சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா, மட்டன்னூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவர் 91,689 வாக்குகள் பெற்று, 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றிபெற்றுள்ளார்.
அதனைதொடர்ந்து கேரளாவில் போட்டியிட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னணி வகிக்து வருகின்றனர். இதன்காரணமாக மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி தொடரும் என்று உறுதியாகிவிட்டது. இந்த தேர்தல் முடிவைப் பலரும் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பினராயி விஜயனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கேரளாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…