நாளை மிசோரம், சத்தீஸ்கரில் தேர்தல்.. 10 தொகுதிகளுக்கு வாக்களிக்க ஒரு மணி நேரம் குறைப்பு..!

மிசோரம் தேர்தல்: 

40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை)  நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 40 இடங்களைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி  கட்சி தற்போது பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. ஆனால்,  இம்முறை மிசோரமில் மும்முனைப் போட்டி நிலவுவதால் மிசோ தேசிய முன்னணி மற்றும் காங்கிரஸ் மற்றும் சோரம் தேசியவாத கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

1276 வாக்குச் சாவடிகளில் 4,13,064 ஆண் மற்றும் 4,39,028 பெண் வாக்காளர்கள் உட்பட 8,52,088 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலுக்காக மிசோரம் முழுவதும் 1276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 50 கம்பெனிகளை சேர்ந்த மத்திய ஆயுதப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபட்டுள்ளனர். இதைத்தவிர சுமார் 5,000 தேர்தல் பணியாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுப்படுள்ளனர். சுமார் 30 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்தில் கடந்த 2018 தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 37.8 சதவீத வாக்குகளுடன் 26 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் தேர்தல்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி (நாளை ) நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் பஸ்தார் மக்களவை தொகுதியின் 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ராஜ்நந்த்கான் மக்களவைத் தொகுதியின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனினும், இந்த 20 தொகுதிகளிலும் வெவ்வேறு நேரங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 10 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க 9 மணி நேரமும், மீதமுள்ள 10 தொகுதிகளுக்கு 8 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளது. 10 சட்டசபை தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதமுள்ள 10 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

இதனால் 10 தொகுதிகளுக்கு 1 மணிநேரம் குறைவான நேரம் வாக்களிக்க வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதிகள் என்பதால் 1 மணிநேரம் குறைவாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளில் மொத்தம்  மொத்தம் 223 வேட்பாளர்கள் உள்ளனர். 40 லட்சத்து 78 ஆயிரத்து 681 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தவுள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 93 ஆயிரத்து 937 பேர், பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 84 ஆயிரத்து 675 பேர், மூன்றாம் பாலினத்தவர் 69 பேர் என மொத்தம் 5304 வாக்குச்சாவடிகளில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில்2-ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 17 தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதி ஒரு கட்டமாகவும், ராஜஸ்தானில் நவம்பர் 25 ஆம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்