கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வார வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (ஏப்ரல் 26ஆம் தேதி) இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
89 மக்களவைத் தொகுதிகளிலும் புயலாய் பிரச்சாரம் மேற்கொண்ட வந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் மக்களிடம் வாக்கு சேகரிப்பு (பிரச்சாரம்) முடிவடைந்தது. கடந்த இரு தினங்களாக ஆளும் பாஜாகவும் எதிர் கட்சியினரான காங்கிரஸும் மாறிமாறி விமர்சனம் செய்து வந்தது தேர்தல் கலத்தை சூடு பிடித்துள்ளது.
13 மாநிலங்களில் நாளை தேர்தல்
அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர், திரிபுரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நட்சத்திர வேட்பாளர்கள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் (வயநாடு தொகுதி), சசி தரூர், நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி கேரளா மாநிலம் (திருச்சூர் பாஜக வேட்பாளர்), மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர் கேரள மாநிலம் (திருவனந்தபுரம் தொகுதி), கஜேந்திர சிங் ஷெகாவத், மேற்கு வங்காள பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் (பாலூர்காட் தொகுதி), சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் (பதான் தொகுதி)
ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமான அருண்கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் (மீரட் தொகுதி) இரண்டு முறை எம்.பி.யும், மூன்றாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிடும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி – உத்தரப்பிரதேச மாநிலம் (மதுரா தொகுதி) ஆகியோர்கள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.