மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன இதனிடையே நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்