#ElectionBreaking : புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐ.டி.ரெய்டு…!

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. அந்த வகையில், வருமான வரித்துறையின், தொடர்ந்து அரசியல் பிரபலங்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அவரது இல்லம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடக்கிறது. இன்று மாலை பிரதமர் மோடி புதுச்சேரிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வரவுள்ள நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025