புதுச்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள் தற்போது அறிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பிடித்துள்ள இந்திய ஜனநாயக கட்சி முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சேப்பாக்கம், செங்கல்பட்டு, காட்பாடி, குடியாத்தம், அரூர், செங்கம், கலசப்பாக்கம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர், அரியலூர், விருத்தாசலம், புவனகிரி, நன்னிலம், திருவையாறு, பேராவூரணி ஆகிய தொகுதிகளை முதல்கட்டமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள் தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி, மனவெளி, காமராஜர் நகர், அரியாங்குப்பம், லாஸ்பேட்டை, பாகூர், காரைக்கால், மங்களம், நிரவி திருப்பட்டினம், மண்ணாடிபட்டு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருக்கும் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரியில் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…