Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற பகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக, இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பல்வேறு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
மணிப்பூர் இம்பால் கிழக்கு பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் மர்ம நபர்களால் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 65 வயது நபர் ஒருவர் காயமடைந்தார். அதே போல மொய்ராங் சட்டமன்ற தொகுதியில் தமன்போக்பி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் புகுந்த மர்மநபர்கள் வாக்குசாவடியில் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இம்பால் மேற்கு பகுதியில் ஒரு வாக்கு சாவடிக்குள் உள்ளே புகுந்த மரம் நபர்கள் வாக்கு இயந்திர EVM மிஷின்களை அடித்து நொறுக்கி தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் அங்கும் பதற்றநிலை உருவானது. பல்வேறு பகுதிகளில் வாக்களிக்க பலர் வராத காரணத்தால் அப்பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே காணப்பட்டது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். இருப்பினும் இறுதியாக 67.43 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவுபெற்று விட்டது. அதன் பிறகு வந்தவர்களை அனுமதிக்கவில்லை என்றும். பின்னர் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது என்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…