தேர்தல் தேதி விவரங்கள் அறிவிப்பு!! 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்!!!

Default Image
  • 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல்
  • தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18இல் ஒரே கட்டமாக தேர்தல்
  • ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்
  • மே 23இல் ரிசல்ட்

பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று கூறப்பட்டது. அது போல தற்போது அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11இல், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18இல் , மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23இல், நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29இல், ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6இல், ஆறாம் கட்ட தேர்தல் மே 12இல், ஏழாம் கட்ட தேர்தல் மே 26 இல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18இல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 தொடங்கி மார்ச் 26இல் முடிவடைகிறது. மார்ச் 27இல் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23இல் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்