2019 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை உள்பட 70 பிரபலங்களை களத்தில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் அக்ஷய்குமார், மோகன்லால், சன்னிதியோல், மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குகிறது.
திரைப்பட துறை, விளையாட்டுத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஊடகத்துறை போன்ற துறைகளை சேர்ந்த பலர் தங்களது துறைகளில் பல சாதனைகள் புரிந்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு பல ஆதரவாளர்களும், ரசிகர்களும் உள்ளனர். அவர்களால் கூட்டத்தை திரட்ட முடியும்.
அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர்கள் அக்ஷய் குமார், சன்னி தியோல், மோகன்லால், நடிகை மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்ட 70 பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி தொகுதியில் அக்ஷய் குமாரும், குருதாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், மும்பையில் மாதுரி தீட்சித்தும், திருவனந்தபுரத்தில் மோகன்லாலும் போட்டியிட வாய்ப்பு வழங்குவது பற்றி பரிசிலீக்கப்பட்டு வருகிறது.
பொது வாழ்வில் சாதனைகள் படைத்தவர்களை பா.ஜனதாவுக்குள் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அவரது உத்தரவுப்படி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பா.ஜனதாவை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்களுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மாற்றாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் கட்சியில் உள்ள எம்.பி.க்கள் பலருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்ற நிலையில் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்களை சரி செய்ய பாஜக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…