இடைத்தேர்தல்..! 150 ரவுடிகளை அழைத்து போலீசார் எச்சரிக்கை..!
கர்நாடகவில் உள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்த 14 ,மதசார்பற்ற ஜனதாதன கட்சியை சார்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவாக செலயல்பட்டதால் எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார்.
இதைத்தொடர்ந்து 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என தீர்ப்பு அளித்தது. மேலும் 2 பேரின் வெற்றி ஏற்கனவே செல்லாது என வழக்கு உள்ள நிலையில் மீதம் முள்ள 15 இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அடுத்த மாதம் 05-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில் பெங்களூர் மாநகர காவல்துறையின் கிழக்கு மண்டலம் சார்பில் பனாஸ்வாடி ரவுடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் 150 ரவுடிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்தும் , குற்ற செயலில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது.மேலும் தேர்தல் சமயத்தில் யாரும் குற்ற செயலில் ஈடுபடாமல் இருக்கவும் கூறியுள்ளனர்.