18 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ல் தேர்தல்; அன்றே முடிவு – தேர்தல் ஆணையம்
18 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3 ஆகிய மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், மணிப்பூர் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 இடங்களுக்கும் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்றும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Election Commission of India announces the Date of Poll and Counting of Votes for deferred Rajya Sabha Poll.
Polling to be held on 19th June 2020.
For more details, visit: https://t.co/WOzscS7D1b#ElectionCommissionOfIndia #ECI pic.twitter.com/jBg0t3VGU9
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) June 1, 2020