ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!  

நாளை மறுநாள் (நவம்பர் 20 ) வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை தற்போது நிறைவு பெற்றது.

Maharastra Jharkhand Electiion

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இதற்கான தீவிர தேர்தல் பரப்புரையில் பாஜக, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பரப்புரை பணியில் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்த தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

நாளை மறுநாள் மேற்கண்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களும், குறிப்பிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக , சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளும், காங்கிரஸ் , சிவசேனா (உத்தவ் தாக்கரே) , தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளும் களத்தில் உள்ளன. அதே போல ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ,  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்