தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் சச்சின்..! புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.!
பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தேர்தல் ஆணையத்துடன் மூன்று வருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். நேற்று, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளை மேற்கொள்ள சச்சின் டெண்டுல்கர் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அங்கீகரிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், தேர்தல் ஆணையத்துடனான மூன்று வருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.