பூத் சிலிப் அடையாள அட்டை கிடையாது… தேர்தல் ஆணையம்!

booth slip

Election2024: பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், கடந்த 1ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு பணியும் தமிழ்நாட்டில் தொடங்கியது.

இந்த நிலையில், பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றும் வாக்காளர் விவரங்களுடன் தற்போது வாக்காளர்களின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்து பிழை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதேசமயம் வாக்காளர் அட்டையில் புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்