இந்த தேதிகளில் விளம்பரம் வெளியிடத் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு

election commission

Election2024: ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிடத் தடை.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையடுத்து, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என அடுத்தடுத்து மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தேர்தலுக்கான பணியில் தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

அதேசமயம் மக்களவை தேர்தலையொட்டி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மக்களவை தேர்தலையொட்டி செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அதாவது, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அன்றும், முன்தினமும் விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனதை புண்படுத்தும் மற்றும் தவறாக வழிநடத்தும் வகையிலான விளம்பரங்கள் கடந்த காலங்களில் வெளியிடப்பட்டதால், இந்த தடை விதிக்கப்படுகிறது. தேர்தலின் கடைசிக் கட்டத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் முழுத் தேர்தல் செயல்முறையையும் கெடுக்கும். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், எந்தவிதமான எரிச்சலூட்டும், வெறுக்கத்தக்க விளம்பரங்கள் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் தடை விதிக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்