மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களுக்குள்ளான நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் தேர்தல் வேளைகளில் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் முதல் மாநில உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இன்னும் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறுகட்ட ஆலோசனைகளை மாநில வாரியாக மேற்கொண்டு வரும் சூழலில் அவ்வப்போது போலியான தேர்தல் தேதிகள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை அவ்வப்போது தேர்தல் ஆணையமும் மறுத்து வருகிறது.
தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை இட்டு இருந்தது. அதில், வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், மார்ச் 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் என்றும், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாள் என்றும், மே மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த தகவல் வாட்சாப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்றும், இதனை யாரும் நம்ப வேண்டாம். உண்மையான தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிடும் என தேர்தல் ஆணையம்குறிப்பிட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…