உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில்,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக வாக்கு எண்ணிக்கையின் போது அல்லது முடிந்த பின்பு யாரும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.
இந்நிலையில்,தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில்,தற்போது வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பாஜகவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில்,உத்தரபிரதேசம், கோவா,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…