இன்று வெளியாகிறது மக்களவை, 4 சட்டமன்றங்கள் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள்..

Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024 : இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படும் மக்களவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிக்கும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள அதே நேரத்தில், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சீக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் ஆகியவை ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.

Read More – பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்… மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை!

வழக்கமாக மக்களவை தேர்தல் தேதியானது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டு விடும். ஆனால், இந்த முறை இரண்டு வாரங்கள் கடந்து இன்று அறிவிக்கப்படுகிறது. முன்னதாக தேர்தல் இணை ஆணையர்கள் ராஜினாமா மற்றும் ஓய்வு பெற்றதன் காரணமாக அந்த இடங்கள் காலியாக இருந்தன. பின்னர் அந்த பொறுப்புகளுக்கு சுக்வந்தர் சிங் சந்து, ஞானகுமார் ஆகியோர் ஆகியோர் நியமிக்கப்பட்டு, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடன் ஆலோசனைகள் நடத்தி இந்த தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.!

இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள தேர்தல் விவரங்களில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்ற விவரங்கள் வெளியாக உள்ளது. பாதுகாப்பு கருதி 6 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்படுகிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக நடத்துவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் அதன் கள நிலவரங்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்படும். குறிப்பாக சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக தேர்தலை எதிர்கொள்கிறது காஷ்மீர், லடாக் மாநிலங்கள்.

Read More – குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்! பெயர் என்ன தெரியுமா?

இன்று மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது உடன் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து விடும். அதற்குப் பிறகு மத்திய மாநில அரசுகள் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. அதன் பிறகுதேர்தல் வேலைகளில் முழு வீச்சில் அரசியல் தலைவர்கள் ஈடுபடுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்