3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்..!
மேற்கு வங்கத்தில் உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிர்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு.
சமீபத்தில் நடந்த மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிர்பூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் 2011, 2016-ல் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜக சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். தற்போது மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளதால் 6 மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.