[file image]
அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா கூட்டணியை சேர்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு கூட்டங்களை நடத்தி வியூகங்களை வகுத்து வருகிறது. இதுபோன்று, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்த பேச்சுவார்த்தையை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். அதன்படி, இன்று பிற்பகல் 12 மணிக்கு 2 மாநில தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம். 5 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கனா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இதுபோன்று, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகள் வித்தியாசத்திலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதேபோல், ராஜஸ்தானிலும் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும், காங்கிரசின் தேசிய தலைமையின் தலையீடு காரணமாக ஆட்சி கவிழாமல் தொடர்கிறது.
மேலும், வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜொராம்தங்கா தலைமையிலான எம்.என்.எஃப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென் மாநிலமான தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 5 மாநில அரசுகளின் பதவி காலமும் இந்தாண்டுடன் முடிவடைய உள்ளது. இந்த சமயத்தில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…