இன்று பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், 243 தொகுதியில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று மதியம் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பில் பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…