கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்தலுக்காக நடைபெற்ற பிரசாரத்தின்போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து கமல்நாத் அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதனால், கடந்ததிங்கள்கிழமை மத்திய பிரதேச பாஜக தலைவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், கமல்நாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர், அதே நேரத்தில் தேசிய மகளிர் ஆணையம் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கோரியது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் குறித்து தரக்குறைவாக விமர்சித்த மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது 48 மணி நேரத்தில் விளக்கமளிக்க உத்தரவு.