கொரோனா வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.., கல்கத்தா உயர்நீதிமன்றம் காட்டம்..!

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கொரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டனர் தலைமை நீதிபதி டி.பி.என். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின் ஆறாவது கட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று ஆறாவது கட்டம் தேர்தலின் போது 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல் கட்ட தேர்தல் மார்ச் 27 அன்று தொடங்கியது. கடைசி கட்டம் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தில் 10,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில்,நேற்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்சில் அரசியல் கட்சிகளால் நடைபெற்ற பிரச்சாரத்தின் போதும், வாக்களிக்கும்போதும் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய முறையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
தலைமை நீதிபதி டி.பி.என். ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கொரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முழு அதிகாரம் உள்ளது. ஆனால் அதை அவர்கள் செய்யத் தவறிவிட்டனர். தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயலற்ற தன்மையை அனுமதிக்க முடியாது என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025