14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம்!

14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை 13ம் தேதிக்கு பதிலாக, வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

election commission of india

டெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது.

முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் உள்ளதால், அவை வாக்கு சதவிகிதத்தை பாதிக்கலாம் என கருதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை மாற்றியுள்ளது.

ஆனால், வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிரா தேர்தல் நெருங்கி வருவதால், அத்துடன் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால், தள்ளிவைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்