காலியாகவுள்ள 7 இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் காலியாகவுள்ள ஏழு ராஜ்யசபா இடங்களுக்கான இடைத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் இரண்டு காலியிடங்களும், மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேசம் தலா ஒரு இடமும் உள்ளன.
இந்த அனைத்து இடங்களுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் முன்னாள் எம்.பி மானஸ் ரஞ்சன் பூனியா ராஜினாமா செய்ததால், அவரது ராஜ்யசபா உறுப்பினர் பதவி 6 மே 2021 அன்று காலியானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜியின் அரசாங்கத்தில் மானஸ் ரஞ்சன் பூனியா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா:
காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சங்கர்ராவ் சதவின் உயிரிழப்பு காரணமாக மகாராஷ்டிராவில் ராஜ்யசபா இடம் காலியாக உள்ளது. இந்த ராஜ்யசபா இடம் மே 16, 2021 ல் இருந்து காலியாக உள்ளது. சதவின் பதவிக்காலம் ஏப்ரல் 2024 வரை இருந்தது.
மத்தியப் பிரதேசம்:
மத்தியப் பிரதேசத்தில் தவார்சந்த் கெலாட் ராஜினாமா செய்த பிறகு காலியாக இருந்த இடத்திற்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது கடந்த ஜூலை 07 அன்று காலியாகிவிட்டது. தவார்சந்த் கெலாட்டின் பதவி காலம் ஏப்ரல் 2024 வரை உள்ளது.
தமிழ்நாடு:
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கே.பி முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததால் இரண்டு இடங்கள் காலியானது. முனுசாமியின் பதவிக்காலம் 2026 வரையும் வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022 வரை உள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…