7 ராஜ்யசபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்..!

Default Image

காலியாகவுள்ள 7 இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் காலியாகவுள்ள ஏழு ராஜ்யசபா இடங்களுக்கான இடைத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் இரண்டு காலியிடங்களும், மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேசம் தலா ஒரு இடமும் உள்ளன.

இந்த அனைத்து இடங்களுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் முன்னாள் எம்.பி மானஸ் ரஞ்சன் பூனியா ராஜினாமா செய்ததால், அவரது ராஜ்யசபா உறுப்பினர் பதவி 6 மே 2021 அன்று காலியானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜியின் அரசாங்கத்தில் மானஸ் ரஞ்சன் பூனியா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா:

காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சங்கர்ராவ் சதவின் உயிரிழப்பு காரணமாக மகாராஷ்டிராவில் ராஜ்யசபா இடம் காலியாக உள்ளது. இந்த ராஜ்யசபா இடம் மே 16, 2021 ல் இருந்து காலியாக உள்ளது. சதவின் பதவிக்காலம் ஏப்ரல் 2024 வரை இருந்தது.

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசத்தில் தவார்சந்த் கெலாட் ராஜினாமா செய்த பிறகு காலியாக இருந்த இடத்திற்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது கடந்த ஜூலை 07 அன்று காலியாகிவிட்டது. தவார்சந்த் கெலாட்டின் பதவி காலம் ஏப்ரல் 2024 வரை உள்ளது.

தமிழ்நாடு:

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கே.பி முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததால் இரண்டு இடங்கள்  காலியானது. முனுசாமியின் பதவிக்காலம் 2026 வரையும் வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022 வரை உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்