சற்று முன்: மக்கள் நீதி மய்யத்திற்கு சின்னம் ஒதுக்கீடு, பிரகாசமாக ஓளிருவாரா அரசியல் கமல்?
- நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது
- மேலும் சில கட்சிகளுக்கும் சில சின்னங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரில் உருவாக்கினார். மேலும், தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் அறிவித்துள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்ய கட்சிக்கு டார்ச் லைட் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.