முதல்முறையாக தேர்தல் களம் காணும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல்.!

பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவை காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், தாக்கல் செய்ய உள்ளார்.

Wayanad Election PriyankaGandhi

கேரளா: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

இதற்காக ஒரு நாள் முன்பு (நேற்றைய தினம்) வயநாடு சென்றடைந்தார். அத்துடன் இடைத்தேர்தல் களத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் பதவி விலகியதை அடுத்து வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதுவரை, காங்கிரஸுக்காக பரப்புரை மட்டுமே செய்து வந்த பிரியங்கா நேரடியாக ஈடுபடாமல் இருந்த நிலையில், தனது சகோதரன் ராகுல் காந்தியின் தொகுதியில் அவர் களம் காண்கின்றார்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவை சிபிபி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில், தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றால், காந்தி குடும்பத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரும் மூன்றாவது நபராக உருவெடுப்பார். முன்னதாக, ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டதன் காரணமாக, வயநாடு தொகுதியை காலி செய்தார்.

இதன் மூலம் அவர் தனது சகோதரியை தேர்தலில் அறிமுகம் செய்துள்ளார். ஐந்தாண்டுகள் தீவிர அரசியலில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதியில் தேர்தலில் முதல் முறையாக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்