வாட்ஸப்பில் 10ஆம் வகுப்பு வினாத்தாள்.! தெலுங்கானா பாஜக தலைவர் உடனடி கைது.!
10ஆம் வகுப்பு இந்தி தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வில் , இந்தி பாடத்திற்கான வினாத்தாளானது வெளியாகிவிட்டது.
வாட்ஸப்பில் பொதுத்தேர்வு வினாத்தாள் :
பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரிக்கையில், கமலப்பூரில் பாஜக நிர்வாகி புரம் பிரசாத் என்பவர் பொதுத்தேர்வு வினாத்தாளை வாட்சாப் மூலம் தெலுங்கானா பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.
பாஜக தலைவர் கைது :
இதனை அடுத்து, தெலுங்கானா பாஜக மாநில தலைவரும், எம்பியுமான பண்டி சஞ்சய்யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, புவனகிரி மாவட்டத்தில் உள்ள பொம்மலா ராமரம் காவல் நிலையம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.