21 நாள் சிசுவின் வயிற்றில் வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

Default Image

21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத எட்டு கருக்களை அகற்றிய மருத்துவர்கள். 

ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் வயிற்றில், கட்டி இருப்பதை சிடி ஸ்கேன் செய்த போது மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, சிசு வயிற்றில் இருந்து உடனே கட்டிகளை அகற்ற பரிந்துரைத்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஞ்சி தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் கட்டி அல்ல கரு இருப்பதாக கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம், 21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத எட்டு கருக்களை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில், குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிசு வயிற்றில் 8 கருக்கள் கண்டறியப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்