ஒரே அறையில் இரு ஜோடிகள்.! நான்கு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.! நடந்தது என்ன.?

Default Image
  • கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த15 பேர் கொண்ட குழு விடுமுறை நாட்களில் நேபாளத்தில் உள்ள போகாரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
  • இந்நிலையில், 2 ஜோடிகள் தங்களின் குழந்தைகளுடன் ஒரே அறையில் தங்கியுள்ளனர், அறையில் ஹீட்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறி 8 பேரும் உயிரிழந்தனர்.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த15 பேர் கொண்ட குழு விடுமுறை நாட்களில் நேபாளத்தில் உள்ள போகாரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர் சுற்றுலா முடித்துவிட்டு நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில், டாமனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2500 மீட்டர் உயரத்தில் இருந்தது என கூறப்படுகிறது. அதனால், அங்கு அவர்கள் தங்களை சூடாக வைத்திருக்க, இரவு முழுவதும் கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார்.

இதனிடையே, விருந்தினர்கள் நான்கு அறைகளை முன்பதிவு செய்ததாக ரிசார்ட்டின் மேலாளர் கூறுகிறார். அதில் 2 ஜோடிகள் தங்களின் குழந்தைகளுடன் ஒரே அறையில் தங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் மற்ற அறைகளில் தங்கியுள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை, அந்த அறையில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 8 பேர் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அதனை கண்ட விடுதி ஊழியர்கள் அவர்களை காத்மண்டுவில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அறையில் ஹீட்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாகவும், அறையின் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டி இருந்ததால் மூச்சு திணறி 8 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் சடலங்களை விரைவில் கேரளா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை நோபாள சுற்றுலா துறை அமைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்