புதிய சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பாதிக்கக்கூடும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதலே சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) ஆகும்.
இந்தியாவில், 1994 ஆம் ஆண்டு முதல் இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.
அந்த வரையறையின் படி சூழலியலில் பாதுகாப்பு என்பதை முன்னிறுத்தாமல் முதலீட்டை முதன்மைப்படுத்துகிறது என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதாவது தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதி என்பது எளிமையாக மாற்றபட்டுள்ளது.
இதற்கு முன் சூழலியல் வரையறை 2006-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வரையறைகளில் தொழிற்சாலை கட்டுவதற்கு இரண்டுவிதமான அனுமதி குழுக்களிடம் அனுமதி வாங்க வேண்டும். (மத்திய குழுக்கள் மற்றும் மாநில குழுக்கள்) ஆனால், தற்போதைய புதிய வரையறையின் படி இரண்டு விதமான சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்கப்படும்.
அதில், ஓன்று ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு திட்டம் குறித்த ஆய்வுகளை நடத்திய பின்னர் சூழலியல் அனுமதி கிடைக்கும். இரண்டாவது வல்லுனர் குழு ஆய்வு இல்லாமல் அனுமதி வழங்கிவிடும் வகையில் உள்ளது என கூறப்படுகிறது.
இரண்டாவது வல்லுனர் குழு எந்த ஆய்வும் இன்றி அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதே போல, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை தற்போது புதிய வரையறையில் வருடத்திற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என உள்ளது.
மேலும், வறண்ட நிலங்கள் புதிய சூழலியல் வரைவின் படி தரிசு நிலங்களாக கணக்கிடப்பட்டு அந்த நிலங்களில் தொழிற்சாலை கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுபோன்ற அனுமதியால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படும் என சூழலியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த புதிய சூழலியல் வரைவின்மீது மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் காலஅவகாசம் வருகின்ற ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதில், மக்கள் தங்கள் புதிய வரையறையின் மீதான தங்கள் கருத்துக்களை பதிவிடலாம். இதன் காரணமாகத்தான் இந்த சட்ட வரையரைக்கு எதிராக டிவிட்டர் இணையதளத்தில் சில நாட்களுக்கு முன்னர், #TNRejectsEIA2020, #ScrapEIA ஆகிய ஹேஸ்டேக்குகள் வைரலாகின.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…