மகாராஷ்டிராவில் முட்டைகள் புரதச் சத்தை அதிகரிக்கும் என்பதால், முட்டையின் தேவையும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகம் முழுவதிலும் மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசை எதிர்ப்பதற்கு நோய் எதிர்ப்பாற்றல் உடலில் அதிகம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய புரதச்சத்து முட்டையில் அதிகம் உள்ளதாகவும் இதனால் கொரோனாவை வெல்லக்கூடிய நோய் எதிர்ப்பாற்றல் உடலில் அதிகரிக்கும் எனவும் மகராஷ்டிராவில் விளம்பரப்படுத்த பட்டுள்ளது.
எனவே, அங்கு முட்டையின் விற்பனை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா அதிகமுள்ள புனேயில் ஒரு நாளுக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை முட்டைகள் விற்பனைக்கு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 25 லட்சம் முட்டைகள் மட்டுமே பண்ணைகளால் வழங்க முடிகிறது. இதனால் ஒரு முட்டையின் விலை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் பொட்டலத்தில் அடைக்கப்பட்ட முட்டை 7 ரூபாய் 50 காசுகள் ஆக அதிகரித்துள்ளது என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…