ஆந்திராவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா அவர்களின் கத்தரிக்காய் லேகியத்தை கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்த தற்போது ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் பல்வேறு இடங்களிலும் கண்டறியப்பட்ட வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபட்டினம் எனும் கிராமத்தை சேர்ந்த போனிகி ஆனந்தையா எனும் ஆயுர்வேத மருத்துவர் கத்தரிக்காய் மூலம் லேகியம் தயாரித்து கொரோனாவுக்கு மருந்து அளித்து வந்துள்ளார். இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்துவதாக நம்பி மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக சென்று வாங்க தொடங்கினர். இவரது லேகியத்தை உட்கொண்ட சிலர் கொரோனவிலிருந்து உடனடியாக குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு தகவல் தெரிந்ததை அடுத்து, ஆனந்தையா அவர்கள் தயாரித்த மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என்பது குறித்த உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக ஐசிஎம்ஆர் குழுவினரிடம் இந்த மருந்து ஒப்படைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்த ஆய்வு முடிவு வெளிவரும் வரை இந்த கத்தரிக்காய் லேகியத்தை விநியோகம் செய்ய வேண்டாம் என தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இதுகுறித்து ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழு, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்த மருந்தால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை எனவும் இவை முற்றிலும் முறையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அந்த குழு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்போது ஆந்திர அரசு ஆனந்தையா அவர்களின் கத்தரிக்காய் லேகியத்தை மக்களுக்கு கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் கத்தரிக்காய் லேகியதுக்கு மட்டுமே அனுமதி எனவும், கண்ணில் விடக்கூடிய கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு அனுமதி இல்லை எனவும் ஆந்திர மாநிலத்தில் தெரிவிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…