சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்திலிருந்து சேறு மற்றும் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற நாளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை டோமலபெண்டா அருகே கட்டுமானத்தில் உள்ள SLBC சுரங்கப்பாதையின் 3.மீ அளவுள்ள கூரைப் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 8 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர். இப்பொது, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த மீட்பு பணியில் இந்திய ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) என பலரும் மீட்புப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தாலும், சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீட்புப் பணி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 4வது நாளாக நடைபெறும் மீட்பு பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒரு பக்கம், சிறப்பு மீட்பு படை, அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
மறுபக்கம், மீட்புப் பணியின் போது சுரங்கப்பாதையில் இயற்கையான பாறை வடிவங்கள் தளர்ந்ததால், திடீரென தண்ணீர் மற்றும் சேறு உள்ளே புகுந்து சுரங்கப்பாதையில் சுமார் 12-13 அடி வரை நிரம்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்திலிருந்து சேறு மற்றும் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற பல நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உள்ளே சிக்கிய 8 தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அனைவருமே சேற்றில் சிக்கியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025